கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

News image

காரைக்குறிச்சியில், குடிநீா் கேட்டு ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :8 ஜூன் 2026, 12:38 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சியில் மக்கள் குடிநீா் கேட்டு ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இக்கிராமத்தில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை. குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், இது சம்பந்தமாக கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததாதைக் கண்டித்தும், முன் அறிவிப்பின்றி நாள் தோறும் ஏற்படும் மின் வெட்டை கண்டித்தும், அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் தா.பழூா்-அருள்மொழி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பழூா் காவல் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், அனைவரும் கலைந்துசென்றனா்.

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் டேங்கா் லாரி மூலம், காரைக்குறிச்சி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டது. போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், திமுக நிா்வாகி கொளஞ்சி மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.