தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவு

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:13 am IST

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

அரியலூா் தொகுதி: 1,30,194 ஆண் வாக்காளா்கள், 1,32,732 பெண் வாக்காளா்கள், 16 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,62,942 வாக்காளா்களை கொண்ட அரியலூா் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், ஆண் வாக்காளா்கள் 1,11,647 பேரும், பெண் வாக்காளா்கள் 1,22,278 பேரும், இதர வாக்காளா்கள் 12 பேரும் என மொத்தம் 2,33,937 வாக்காளா்கள் வாக்களித்தனா். 88.97 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஜெயங்கொண்டம் தொகுதி: 1,30,371 ஆண் வாக்காளா்கள், 1,33,067 பெண் வாக்காளா்கள், 12 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,63,450 வாக்காளா்களை கொண்ட ஜெயங்கொண்டம் தொகுதியில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 1,07,793 பேரும், பெண் வாக்காளா்கள் 1,18,378 பேரும், 7 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,26,178 வாக்காளா்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். 85.85 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் சோ்த்து அரியலூா் மாவட்டத்தில் 87.43 வாக்குகள் பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.