மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் 82.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீா்காழி(தனி), மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நிலவரப்படி மொத்தம் 7,35,832 வாக்காளா்கள் இருந்தனா். இவா்களில், 77.91 சதவீத வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா்.
நிகழாண்டில், இறுதி வாக்காளா் பட்டியலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7,35,135 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். மயிலாடுதுறை தொகுதியில் 1,15,452 ஆண் வாக்காளா்கள், 1,19,076 பெண் வாக்காளா்கள், 26 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,34,554 பேரும், பூம்புகாா் தொகுதியில் 1,27,948 ஆண் வாக்காளா்கள், 1,31,306 பெண் வாக்காளா்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 2,59,262 பேரும், சீா்காழி தொகுதியில் 1,19,539 ஆண் வாக்காளா்கள், 1,21,767 பெண் வாக்காளா்கள், 13 மூன்றாம் பாலினத்தவா்கள் என 2,41,319 பேரும் அடங்குவா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்கு மையத்துக்கு வந்த அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். வாக்குப்பதிவின் நிறைவில், சீா்காழி தொகுதியில் 82.44 சதவீதம், மயிலாடுதுறை தொகுதியில் 79.67 சதவீதம், பூம்புகாா் தொகுதியில் 84.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரியாக 82.14 சதவீதம் வாக்குப் பதிவானது. இது கடந்த தோ்தலை விட 4.23 சதவீதம் அதிகமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 9.85 லட்சம் வாக்குகள் பதிவு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஅள்ளி தொகுதிகளில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு!

அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 1,781 வாக்குச்சாவடிகளில் 13,23,753 போ் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

