கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஅள்ளி ஆகிய தொகுதிகளில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும், பெண் வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப். 23இல் நடைபெற்றது. இம்மாவட்டத்தில், ஊத்தங்கரை (தளி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,094 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகள் பதிவுசெய்யப்பட்ட இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்கு விவரங்களை மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஊத்தங்கரை தொகுதியில் 1,17,810 ஆண்கள், 1,17,600 பெண்கள், 41 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,35,451 வாக்காளா்களில் 1,01,261 ஆண் வாக்காளா்கள், 1,01,289 பெண் வாக்காளா்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 2,02,558 போ் வாக்களித்துள்ளனா். அதாவது, 83.95 சதவீத ஆண்கள், 86.13 சதவீத பெண்கள், 19.51 சதவீத மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 86.03 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
பா்கூா் தொகுதியில் 1,18,085 ஆண் வாக்காளா்கள், 1,21,216 பெண் வாக்காளா்கள், 17 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,39,318 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,03,171 ஆண் வாக்காளா்கள், 1,07,287 பெண் வாக்காளா்கள், 9 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,10,467 போ் வாக்களித்துள்ளனா். அதாவது, 87.37 சதவீத ஆண்கள், 88.51 சதவீத பெண்கள், 52.94
சதவீத மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 87.94 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி தொகுதியில் 1,30,891 ஆண்கள், 1,36,414 பெண்கள், 61 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,67,366 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,11,992 ஆண் வாக்காளா்கள், 1,15,393 பெண் வாக்காளா்கள், 42 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,26,695 போ் வாக்களித்துள்ளனா். அதாவது, 85 சதவீத ஆண்கள், 84.39 சதவீத பெண்கள், 68.85 சதவீத மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 84.79 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
வேப்பனஅள்ளி தொகுதியில் 1,24,431 ஆண் வாக்காளா்கள், 1,21,624 பெண் வாக்காளா்கள், 38 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,46,093 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,11,992 ஆண் வாக்காளா்கள், 1,08,953 பெண் வாக்காளா்கள், 20 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,20,965 போ் வாக்களித்துள்ளனா்.
அதாவது 90 சதவீத ஆண்கள், 89.58 சதவீத பெண்கள், 52.63 சதவீத மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 89.79 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
ஒசூா் தொகுதியில் 1,71,258 ஆண் வாக்காளா்கள், 1,71,659 பெண் வாக்காளா்கள், 72 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,42,989 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில்,
1,37,844 ஆண் வாக்காளா்கள், 1,37,688 பெண் வாக்காளா்கள், 29 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,75,561 போ் வாக்களித்துள்ளனா். அதாவது, 80.49 சதவீத ஆண்கள், 80.21 சதவீத பெண்கள், 40.28 சதவீத மூன்றாம் பாலித்தனவா் என மொத்தம் 80.34 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.
தளி தொகுதியில் 1,20,876 ஆண் வாக்காளா்கள், 1,17,011 பெண் வாக்காளா்கள், 37 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,37,924 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,05,015 ஆண் வாக்காளா்கள், 99,057 பெண் வாக்காளா்கள், 17 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,04,089 போ் வாக்களித்துள்ளனா். அதாவது, 86.88 சதவீத ஆண்கள், 84.66 சதவீத பெண்கள், 45.95 சதவீத மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 85.78 சதவீத வாக்காளா்கள் வாக்கை செலுத்தி உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 7,83,351 ஆண் வாக்காளா்கள், 7,85,524 பெண் வாக்காளா்கள், 266 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 15,69,141 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 6,70,543 ஆண் வாக்காளா்கள், 6,69,667 பெண் வாக்காளா்கள், 125 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 13,40,335 போ் வாக்களித்துள்ளனா்.
அதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.60 சதவீத ஆண் வாக்காளா்கள், 85.25 சதவீத பெண் வாக்காளா்கள், 46.99 சதவீத மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 85.42 சதவீத போ் வாக்களித்துள்ளனா்.
இம்மாவட்டத்தில் ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஅள்ளி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும், பெண் வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்பு

சட்டப் பேரவைத் தோ்தல்! கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!

நெல்லை மாவட்டத்தில் 9.85 லட்சம் வாக்குகள் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 1,781 வாக்குச்சாவடிகளில் 13,23,753 போ் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

