/

நெல்லை மாவட்டத்தில் 9.85 லட்சம் வாக்குகள் பதிவு

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 9 லட்சத்து 85 ஆயிரத்து 676 வாக்குகள் (77.90 சதவீதம்) வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:22 am IST

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 9 லட்சத்து 85 ஆயிரத்து 676 வாக்குகள் (77.90 சதவீதம்) வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு (எஸ்ஐஆா்) நடைபெற்ற இந்தத் தோ்தலில் பல மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானபோதும், திருநெல்வேலி மாவட்டத்தில் 77.90 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்களைவிட, பெண் வாக்களா்களே அதிகம் வாக்களித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 6, 16, 911 ஆண் வாக்காளா்கள், 6,48,245 பெண் வாக்காளா்கள், 146 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12,65,302 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், 4,68,880 ஆண் வாக்காளா்கள், 5,16,096 பெண் வாக்காளா்கள், 100 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 9,85,676 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 82.82 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பாளையங்கோட்டை தொகுதியில் 68.90 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 47,816 போ் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.

தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:

வ.எண் தொகுதி ஆண் பெண் 3-ஆம் பாலினம் மொத்தம் சதவீதம்

1. திருநெல்வேலி 1,03,873 1,11808 63 2,15,744 78.21

2. அம்பாசமுத்திரம் 89,271 99,448 10 1,88,729 82.82

3. பாளையங்கோட்டை 84,514 92,790 5 1,77,309 68.90

4. நான்குனேரி 98,902 1,07,435 8 2,06,345 80.23

5. ராதாபுரம் 92,320 1,05,215 14 1,97,549 79.96

மொத்தம் 4,68,880 5,16,696 100 9,85,676 77.90.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.