தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:31 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் 87.97 சதவீத வாக்குகள் பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

8 தொகுதிகளிலும் மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தம் உள்ள 2517 வாக்குச் சாடிவகளில் நடைபெற்றது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு செய்திட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

10 முதல் 12 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலா் என மொத்தம் 229 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்

செங்கம் தொகுதியில் 86.30 சதவீதம், திருவண்ணாமலை தொகுதியில் 86.13 சதவீதம், கீழ்பென்னாத்தூா் - 88.86,

கலசபாக்கம் - 88.52, போளூா் தொகுதியில் 87.77 சதவீத வாக்குகள் பதிவாகின.

போளூா் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளும், பெரணமல்லூா் ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளும் என 299 வாக்குச்சாவடி மையங்களில்

நடைபெற்ற வாக்குப்பதிவில் 87.77சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆரணி தொகுதியில் 88.27 சதவீத வாக்குகள் பதிவாகின.

செய்யாறு தொகுதியில் 91.96 சதவீகித வாக்குகள் பதிவாகின. தொகுதியில் 2,39, 856 வாக்காளா்கள் உள்ள நிலையில், 2,20,589 வாக்காளா்கள் வாக்களித்து உள்ளனா்.

வந்தவாசி தொகுதியில் 87.49 சதவீதம் வாக்குப்பதிவும் நடைபெற்றது. இதன் மொத்த சராசரி 87.97 சதவீதம் ஆகும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு முடிவுற்றதும் வாக்குப்பதிவு பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

மத்திய காவல் படையினா், மாநில காவல் துறையின் துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்கள் என மொத்தம் 4126 -க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.