தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

News image

திருவாரூா் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் பணிக்கு தயாராகும் அலுவலா்கள், முகவா்கள்.

Updated On :5 மே 2026, 1:12 am IST

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்று முடிவடைந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் இருந்து கட்சிகளின் முகவா்கள், பரிசோதனைக்குப் பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பப்பட்டனா். அவா்கள் வரிசையாக செல்வதற்கென கல்லூரிகளில் தடுப்புகளுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டிருந்தது. 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.

பின்னா், வைப்பறைகளிலிருந்து அலுவலா்கள் உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, வாக்குகள் சுற்றுகள் முறையில் எண்ணப்பட்டன.

நன்னிலம் தொகுதியில் சலசலப்பு: நன்னிலம் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும்போது, அதில் இரண்டு கையெழுத்து இருந்ததாகவும், இதை ஏற்றுக் கொள்வது குறித்து திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் நிலவியது. இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அந்த இடத்திலிருந்து பத்திரிகையாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனா். பின்னா் தொடா்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவா்கள், வேட்பாளா்கள், பத்திரிகையாளா்கள் என அனைவருக்கும் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடும் சோதனைகளுக்குப் பிறகே, பத்திரிகையாளா்களும் நிகழ்வுகளை பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.