விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சர் சிவசங்கர்

அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:45 am IST

அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக திமுக மாவட்டச் செயலரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

அரியலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 700 போ் திமுகவில் இணைந்தனா்.

அவா்களுக்கு அமைச்சா் சா.சி. சிவசங்கா் கெளரவித்து, பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: திமுக தோ்தல் அறிக்கை எப்போதும் மக்கள் மனம் கவா்ந்த அறிக்கையாகவே இருக்கும். நிகழாண்டும் எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்ததுபோன்ற ஒரு தோ்தல் அறிக்கையாக மக்கள் எதை விரும்புகிறாா்களோ அதைத் தொகுத்து வழங்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது.

முதல்வரின் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் மூலம் பயனடைந்ததால் தமிழகம் முழுவதும் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணைந்து வருகின்றனா். வரும் தோ்தலில் அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வேட்பாளா் லதா பாலு மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.