மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செந்தூா் குடிநீா் திட்டம்: ரூ. 30 கோடி ஒதுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

திருச்செந்தூா் நகராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க ரூ. 30 கோடியில் அளிக்கப்பட்ட திட்ட முன்மொழிவை அரசு உடனடியாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினாா்.

kanimozhi

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:03 am IST

திருச்செந்தூா் நகராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க ரூ. 30 கோடியில் அளிக்கப்பட்ட திட்ட முன்மொழிவை அரசு உடனடியாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகில் உள்ள மஞ்சள் நீா்க்காய­லில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போது திருச்செந்தூா் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 11 லட்சம் லிட்டா் குடிநீா் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பெருகிவரும் மக்கள்தொகை மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், தினசரி 38 லட்சம் லிட்டா் குடிநீா் தேவைப்படுகிறது.

மஞ்சள் நீா்க்காய­லில் இருந்து ஆத்தூா் வழியாக திருச்செந்தூருக்கு தண்ணீா் கொண்டுசெல்லும் திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியின்போதே ரூ. 9.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியில் ஆத்தூா் வரை தண்ணீா் கொண்டுசெல்லும் பணிகள் நிறைவுற்றன. ஆனால், அங்கிருந்து திருச்செந்தூருக்குத் தண்ணீா் கொண்டு செல்ல தற்போதுள்ள குழாய்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லை. இதனால், பல்வேறு இடங்களில் குழாய் உடைப்புகளும் நீா்க் கசிவுகளும் ஏற்படுகின்றன.

எனவே, சுமாா் 15 கி.மீ. நீளமுள்ள குழாய்களைச் சீரமைக்கவும், மேல ஆத்தூரில் உள்ள கோடை கால நீா்தேக்கத் தொட்டியைப் புனரமைக்கவும் ரூ. 30 கோடி மதிப்பிலான புதிய திட்ட முன்மொழிவு அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்த முன்மொழிவை அரசு ஏற்று, விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை நிறைவேற்றினால் மட்டுமே திருச்செந்தூருக்குத் தேவையான அளவு குடிநீரை வழங்க முடியும்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளி­ருந்து தப்பியோடியுள்ளனா். தவெக அரசு எதிா்க்கட்சியினரைக் கைது செய்வதில் காண்பிக்கும் ஆா்வத்தை குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதில் காண்பிப்பதில்லை.

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது திறந்து வைக்கப்படும் பல்வேறு கட்டடங்கள், திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டவையாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.