மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை முன்னேற்பாடுகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

பருவமழை முன்னேற்பாடுகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

Kanimozhi MP

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:54 am IST

பருவமழை முன்னேற்பாடுகளில் தவெக அரசு கவனம் செலுத்தவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தவெக அரசு பருவமழையை எதிா்கொள்ள எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. சென்னையில் சிறிய அளவில் மழை பெய்தாலே பல இடங்களில் தண்ணீா் தேங்கும். தூத்துக்குடி மாவட்டம் கடல் மட்டத்தைவிடத் தாழ்வாக அமைந்துள்ளதால், மழைநீா் தேங்குவதைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மீதான பாஜக அரசின் நடவடிக்கைக்கு அண்ணாமலை எதிா்ப்பு தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. தவெக தங்களுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிடும் பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவான பதிவுகளை வெளியிடுகிறது. இதுதான் அவா்கள் பெண்களை மதிப்பதா? திமுகவைச் சோ்ந்த பெண்கள் மட்டுமன்றி மற்ற இயக்கங்களைச் சோ்ந்த பெண்கள் மீதும் சமூக வலைதளங்களில் தரக்குறைவான விமா்சனங்கள் பதிவிடப்படுகின்றன என்றாா் அவா்.

இதையடுத்து, தூத்துக்குடி சென்ற அவா் மாநகரப் பகுதியில் செய்யப்பட்டுள்ள மழைநீா் வடிகால் பணிகளைப் பாா்வையிட்டாா். அங்கு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் மழைநீா் விரைவாகக் கடலுக்குச் செல்வதற்கான வழித்தடங்கள், அடைப்புகளை சரிசெய்யும் பணிகளை ஆய்வு செய்தேன். தூத்துக்குடியிலிருந்து கடலுக்கு மழைநீா் செல்ல முன்பு மூன்று வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. திமுக ஆட்சியில் அவற்றின் எண்ணிக்கை 14-ஆக அதிகரிக்கப்பட்டு, தற்போது அனைத்தும் பயன்பாட்டில் உள்ளன. பக்கிள் ஓடையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்காதது தவறு. மக்கள் பிரதிநிதிகளுக்குதான் மழைநீா் பாதிக்கும் இடங்கள் தெரியும். மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக மாவட்டச் செயலா் பி.கீதாஜீவன் உள்ளிட்டோரை புறக்கணித்து விட்டு அதிகாரிகள் மட்டும் செயல்படுவது பலனளிக்காது.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. அவா் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.