மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆவின் பொருள்களின் விலையைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தவெக அரசால் ஆவின் பொருள்களின் விலையைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

kanimozhi

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 1:40 am IST

தவெக அரசால் ஆவின் பொருள்களின் விலையைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சிறைகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகவும், ஒரே நாளில் 17 கைதிகள் தப்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவல்துறையில் நிகழும் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், அரசியல் தலைவா்களுக்குப் பதிலளிப்பவா்களாகவும் காவல்துறையினா் செயல்படுவது வருத்தமளிக்கிறது. காவல்துறையினா் தங்களது பணிகளைச் செய்ய வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியைப் போலச் செயல்படக் கூடாது.

அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயா்ந்து வரும் நிலையில், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருள்களின் விலையையாவது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதைக்கூட இந்த அரசு செய்யவில்லை.

விலைவாசி உயா்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைக் கண்டித்து, திமுக தலைவா் அறிவிப்பின்படி, மகளிரணி சாா்பில் வருகிற 31-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.