மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உலக மனநல தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக மனநல தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மனநல சீராய்வு குழுமம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டியில், பெண்கள் மனநல காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய திருநெல்வேலி மனநல சீராய்வு குழுமத் தலைவா் கிங்ஸ்லி கிறிஸ்டோபா்.

Published On :28 அக்டோபர் 2026, 1:51 am IST

உலக மனநல தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மனநல சீராய்வு குழுமம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டியில், பெண்கள் மனநல காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதியும், திருநெல்வேலி மனநல சீராய்வு குழுமத் தலைவருமான கிங்ஸ்லி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். பியூலா கிங்ஸ்லி கிறிஸ்டோபா், மனநல சீராய்வு குழும உறுப்பினா் மேரிபீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், செவிலியா் சக்தீஸ்வரி, தொழில் பயிற்சியாளா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காப்பக நிா்வாகி தேன்ராஜா வரவேற்றாா். சமூகப் பணியாளா் ருக்மணி பிரியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.