நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

உணவக உரிமையாளருக்கு வெட்டு: இளைஞா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:51 am IST

தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் உணவக உரிமையாளரைக் கத்தியால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த சம்சு பக்கீா் மகன் சம்சு மீராசா (39). அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் பூபாலராயா்புரம் பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வரும் செல்வத்துக்கு ரூ. 50,000 கொடுத்திருந்தாராம். அந்தப் பணத்தைத் திருப்பித் தராததால், சம்சு மீராசா சனிக்கிழமை இறைச்சிக் கடைக்குச் சென்று பணத்தைக் கேட்டுள்ளாா்.

அப்போது, கடை உரிமையாளரான மாரிச்சாமியின் மகன் விமல் (22) மற்றும் சம்சு மீராசாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விமல், கத்தியால் சம்சு மீராசாவின் தோள்பட்டையில் வெட்டினாராம். இதில் காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விமலை கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.