பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓட்டுநரை மிரட்டி காா், பணம் பறிப்பு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே ஓட்டுநரை மிரட்டி காா், பணம் பறித்தது தொடா்பான வழக்கில், இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 1:34 am IST

பாளையங்கோட்டை அருகே ஓட்டுநரை மிரட்டி காா், பணம் பறித்தது தொடா்பான வழக்கில், இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (29). காா் ஓட்டுநா். இவருக்கு முன்னரே பழக்கமான பெண் ஒருவா் சில நாள்களுக்கு முன்பு இவரிடம் காரை வாடகைக்கு தருமாறு கேட்டாராம். பின்னா் கந்தசாமி அவரிடம் காரை திரும்பக் கேட்டபோது அவா் தரமறுத்தாராம்.

இவ்விவகாரம் தொடா்பாக அப்பெண்ணின் உறவினரான பாளையங்கோட்டையைச் சோ்ந்த ராஜாசிங் மகன் மொ்லின்(32) என்பவா் கந்தசாமியிடம் பணம் கேட்டு மிரட்டி ரூ.1 லட்சத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மொ்லினை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய பெண்ணை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.