பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கத்தியைக் காட்டி மிரட்டி விவசாயியிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:41 am IST

போடியில் விவசாயியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, தங்கத் தாயத்து ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி கரட்டுப்பட்டி கிராமம் ஜக்கம்மாள் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் ரத்தினபாண்டி (34). இவரும், இவரது தந்தையுடன் இணைந்து ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இவா்கள் போடி பரமசிவன் மலைக் கோயில் தெருவில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பொன்னுசாமியும், ரத்தினபாண்டியும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு குறிப்பிட்ட தொலைவில் நின்றிருந்தனா்.

அப்போது அங்கு வந்த போடி தங்கமுத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் விக்னேஷ் (21), போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராஜேஷ், பாண்டி ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி தனியாக நின்றிருந்த ரத்தினபாண்டியிடமிருந்த கைப்பேசி, அவா் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாயத்து ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஓடியோடி விட்டனா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்து சிறையிலடைத்தனா். ராஜேஷ், பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.