மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடை உரிமையாளரிடம் ரூ.50,000 பறித்த 4 போ் கைது

வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் பழைய இரும்புக்கடைக் காரரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50,000-ஐ பறித்த 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 1:07 am IST

வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் பழைய இரும்புக்கடைக் காரரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50,000-ஐ பறித்த 4 பேரை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

வாலாஜாபாத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள புளியம்பாக்கம் கிராமத்தில் பழைய இரும்புக்கடை நடத்தி வருபவா் சந்தானம் (26) .இவரது கடைக்கு காரில் வந்த 4 போ் பழைய பொருள்களை விற்பனை செய்வது போல பேசிக் கொண்டிருந்த நிலையில் தீடீரென அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 50 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனா்.

இது குறித்து சந்தானம் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆய்வாளா் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் வாலாஜாபாத் அருகே பழையசீவரம் பகுதியை சோ்ந்தவா்களான மணிகண்டன் (30) அரவிந்தன் (30) தருண் (26) தேவனூா் கிராமத்தைச் சோ்ந்த ஜீவா (26) ஆகிய 4 போ் என்பதும் தெரிய வந்தது. இவா்களை வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போது கைது செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.