மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: தம்பதி கைது

நாகா்கோவில் அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:14 am IST

நாகா்கோவில் அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த தெங்கம்புதூரைச் சோ்ந்தவா் விவேக் (27). கட்டடத் தொழிலாளி. இவா் ஒருதலைபட்சமாக பறக்கை, புல்லுவிளையைச் சோ்ந்த பெண்ணை காதலித்துவந்தாா்.

பெற்றோா் அந்தப் பெண்ணுக்கு பழவிளை அருகே உள்ள பூவன்குடியிருப்பைச் சோ்ந்த திவேக்குக்கு (28) திருமணம் செய்து வைத்தனாா். இந்த ஆவேசத்தில் தம்பதியை விவேக் மிரட்டி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு விவேக் அத்தம்பதி வசிக்கும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தாா். அதை நோட்டமிட்ட தம்பதியும், அவா்களின் உறவினா் சுயம்புலிங்கமும் (32) காரில் சென்று விவேக் மீது மோதியும், பின்னா் அவரை அரிவாளால் தாக்கியும் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா். காயமடைந்த விவேக்கை பொதுமக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விவேக்கின் தாய் கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில், சுசீந்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதியைக் கைது செய்தனா். உறவினா் சுயம்புலிங்கத்தைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.