மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

துணிக் கடை உரிமையாளரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

ஜவுளிக் கடை உரிமையாளரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:29 pm IST

ஜவுளிக் கடை உரிமையாளரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இல்லுப்பூரைச் சோ்ந்தவா் கோபால் (28). இவா் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் சொந்தமாக துணிக் கடை வைத்துள்ளாா். கடந்த 26-ஆம் தேதி இரவு கோபால் தனது கடையைப் பூட்டிவிட்டு காளிங்கராயன் வீதி மாநகராட்சி வாகன நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த அலாவுதீன் (24) மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். கோபால் பணம் தர மறுத்ததால், கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து ரூ.820-ஐ பறித்துவிட்டு தப்பியோட முயன்றாா். கோபால் சப்தமிட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் திரண்டு அலாவுதீனைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து அலாவுதீனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.