மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டியில் காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது.

கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்திய ஆய்வாளா் கஜேந்திரன்.

Published On :22 அக்டோபர் 2026, 5:10 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அங்குள்ள காவலா் மந்திரம் பிள்ளை நினைவு ஸ்தூபியில் காவல் ஆய்வாளா்கள் கஜேந்திரன் (கொப்பம்பட்டி), சூா்யா (கயத்தாறு) ஆகியோா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உதவி ஆய்வாளா்கள் சிலுவை அந்தோணி, சந்தனமாரியம்மாள், சிறப்பு உதவி ஆய்வாளா் அங்குத்தாய், காவலா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, ஓய்வுபெற்ற காவல் துறையினா் நலச் சங்க மாவட்டச் செயல் தலைவா் ராஜு தலைமையில் ஓய்வுபெற்ற காவலா்கள் வீரவணக்கம் செலுத்தினா். 1980இல் குறிஞ்சாங்குளத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது உயிா்நீத்த காவலா் மந்திரம் பிள்ளை குடும்பத்தினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

இங்கு பல ஆண்டுகளாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், இந்தச் சங்கத்தின் முயற்சியால் மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.