மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெரம்பலூரில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் புதன்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:36 am IST

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலா் வீரவணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1959-ஆம் ஆண்டு, அக். 21-ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினா் நடத்திய திடீா் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் வீர மரணமடைந்த நாள், ஆண்டுதோறும் காவலா் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மாவட்டக் காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலா் வீர வணக்க நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில், காவலா் நினைவுத் தூணுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் தலைமையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, பல்வேறு சூழல்களில் நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த காவலா்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் கண்காணிப்பாளா் பாரதிதாசன் (தலைமையிடம்), துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.