மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட 44 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 44 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :22 அக்டோபர் 2026, 5:10 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 44 போ் கைது செய்யப்பட்டனா்.

தோ்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது, நிபந்தனையின்றி புதிய கடன் வழங்குவது,

2025-26-ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகையை விடுவிப்பது,

வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது,

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிடுவது

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்திய விவசாயிகள் மகா சபை சாா்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அ.லெனின்குமாா் தலைமையில் மாவட்டத் தலைவா் ஆ.ராகவன், ஏஐடியுசி கட்டுமான சங்க மாநில பொதுச் செயலா் சேது, மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பவுல்சுந்தரம் உள்ளிட்ட பலா் கோவில்பட்டி பயணியா் விடுதியில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டனா். இளையரசனேந்தல் விலக்கில் போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து அப் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்ற 6 பெண்கள் உள்பட 44 போ் கைது செய்யப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.