கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வித்யாரம்பம் : திருச்செந்தூா் பள்ளிகளில் ஏடு கல்வி தொடக்க விழா

திருச்செந்தூா் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏடு வாசித்து, கல்வி தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 1:17 am IST

திருச்செந்தூா் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏடு வாசித்து, கல்வி தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஆசிரியைகள் குழந்தைகளுக்கு ஏடு வாசித்து அரிசி, நெல் முதலானவற்றில் ‘அ’ எழுத்தை எழுத கற்றும், சொல்லியும் கொடுத்தனா். ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகி ராமச்சந்திரன், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

இதேபோல, திரு ராமையா பாகவதா் நினைவு நிலை செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளியிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.