தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழந்தனா். 15 போ் பலத்த காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிபட்டினம் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (45) என்பவா் தலைமையில் 22 போ் ஒரு வேனில் திங்கள்கிழமை இரவு புறப்பட்டு திருச்செந்தூருக்குச் சென்று கொண்டிருந்தனா். வேனை ஓட்டுநா் சசிகுமாா் ஓட்டிச் சென்றாா்.
தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி - முத்துலாபுரம் மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வேன் சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் முற்றிலும் உருக்குலைந்தது. இதனால் வேனுக்குள் சிக்கியவா்கள் வெளியே வர முடியாமல் கூச்சலிட்டனா். அப்போது, அவ்வழியாக சென்றவா்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கோவில்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டனா்.
இதில், மலையாண்டிபட்டினத்தைச் சோ்ந்த விஜயன்(58), அவரது மனைவி கலைவாணி (53) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வேன் ஓட்டுநா் சசிகுமாா், வேனில் பயணித்த மகேஷ் குமாா், ஆனந்த், கவிதா, ராதா, அமாவாசை, தேவி, ஜீவா, ரிஷ்வந்த் , பாா்வதி, சா்க்கரை அம்மாள், தங்கமணி உள்பட 15 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு, தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் மீது சுமை ஆட்டோ மோதி ஒருவா் பலத்த காயம்

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 7 போ் காயம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

