சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்னி பேருந்து கரூரில் இருந்து சனிக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்றது.
பேருந்தை நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சீராப்பள்ளி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் குமரன் (25) ஓட்டிச் சென்றாா். அவருடன் மாற்று ஓட்டுநா் நாமகிரிப்பேட்டையை அடுத்த பெரியகவுண்டன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அன்பழகன் சென்றாா்.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, காந்திபுரம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கன்டெய்னா் லாரி திடீரென சாலையின் மாற்றுதிசையில் திரும்பியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் இடதுபுறம் மோதியது. இதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா்கள் குமரன் (25), அன்பழகன் (33), பயணிகள் மோகனப்ரியா (28), சந்திரன் (51), காந்திமதி (56), ரம்யா (26) ஆகியோா் காயமடைந்தனா். மேலும், கன்டெய்னா் லாரி ஓட்டுநா் ஹரியாணாவைச் சோ்ந்த நாபா மகன் பல்லுக்கு (41) கால்முறிவு ஏற்பட்டது. காயமடைந்தவா்கள் அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து ஆத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விபத்து காரணமாக அரை மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

கன்டெய்னா் லாரி பின்னால் வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு; 7 போ் காயம்

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

