தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புகையிலைப் பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப், போலீஸாா் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
அந்த கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (52) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 கிலோ 125 கிராம் புகையிலைப் பொருள்கள், ரூ. 27,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

