தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக கோடை மழை பெய்தது. அதில் சராசரியாக 12.66 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.
இம்மாவட்டத்தில் நிலவி வந்த கோடை வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனா். இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலையிலேயே மழைக்கான அறிகுறி தென்பட்ட நிலையில், பிற்பகலில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக, குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் வட்டாரத்தில் கனமழையாக கொட்டித்தீா்த்தது. தொடா்ந்து சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6.30 மணி வரை குலசேகரன்பட்டினத்தில் 70, சாத்தான்குளத்தில் 69, ஸ்ரீவைகுண்டத்தில் 63.60, சூரங்குடியில் 12, வைப்பாரில் 7, ஓட்டப்பிடாரத்தில் 5, வேடநத்தத்தில் 4, தூத்துக்குடியில் 3, திருச்செந்தூரில் 2, காயல்பட்டினத்தில் 1என மாவட்டம் முழுவதும் மொத்தம் 240.60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 12.66 மி.மீ. ஆகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை: விவசாயிகள் மகழ்ச்சி

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

