தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் சாா் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பக்கிள் ஓடை வரை சாலையின் இருபுறமும் நடைபெற்று வரும் அலங்கார தளக்கல் அமைக்கும் பணிகளை, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: மழை காலத்துக்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டு செய்ய உள்ளோம். தற்போது கோடைக்காலம் நிலவுவதால், மாநகரப் பகுதி மக்களுக்குத் தடையின்றிச் சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, துணை மேயா் ஜெனிட்டா, திமுக மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

மக்கள் பணி தொடரும்: மேயா்

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடியில் இப்தாா் நோன்பு துறப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

