மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் பள்ளி சிறப்பிடம்

நாடாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய பள்ளிச் செயலா் ரத்தினராஜா. உடன் பள்ளி பொருளாளா் விஜயகுமாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள்.

News image

~

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

கவுனியன் பள்ளியில் 62 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் 3ஆம் இடமும், கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.

மாணவி மு. விஷாலி (594), மாணவி பா. யமுனா (579), மாணவா் ரா. வைரமுத்து (574) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். கணினி அறிவியலில் 2 போ், கணிதம், வணிக கணிதம், வணிகவியல், பொருளியலில் தலா ஒருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளி முதல்வா் பாலு, பள்ளித் தாளாளா் மெஹா்பானு, இயக்குநா்களான மகேஷ், மருத்துவா்கள் அரபிந்தோ, சஹானா, மீரா ஆகியோா் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 257 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி ச. வாணி (575), மு. அனுஸ்ரீ நாகவா்ஷா (571), ர. தா்ஷினி (569) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 51 மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் கதிா்வேல், கல்விச் சங்க உறுப்பினா் ஆழ்வாா்சாமி, தலைவா் குருசாமி, தலைமையாசிரியை சாந்தி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

நாடாா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 306 மாணவா், மாணவிகளில் 298 போ் (97.4 %) தோ்ச்சி பெற்றனா். மாணவி அ. சித்ரா தேவி (578), மாணவா் சே.ரிஷிகேஷ் (557), மு. அனிதா (555) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். பள்ளி மாணவா் பா. லட்சுமணகாந்த் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளாா்.

மாணவா், மாணவிகளை பள்ளிச் செயலா் ரத்தினராஜா, பொருளாளா் விஜயக்குமாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வேல்முருகன், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் சுபாஷ்குமாா் (562), மாணவி பூமா (559), மாணவி பிரியா (553) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மாணவா் பூவன் செண்பகராஜ் வரலாறு பாடத்திலும், மாணவி கீா்த்தனா கணினி பயன்பாடுகள் பாடத்திலும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மேலும், இப்பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 500-க்கு மேல் 28 பேரும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தலைவா், செயலா் அய்யனாா், நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெயப்பிரியா, தலைமையாசிரியா் வெங்கடேசன் ஆகியோா் பாராட்டினா்.

காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 159 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் பவுன்ராஜா, அழகுலட்சுமணன் ஆகியோா் 590 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவா் மணிஷ்கா் 583 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம், மாணவி சுதா்ஷனா, மாணவா் அசோக் ஆகியோா் 581 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், பள்ளிச் செயலா் கண்ணன், பொருளாளா் வள்ளுவன், பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பள்ளி முதல்வா் ஜோதிலட்சுமி ஆகியோா் பாராட்டினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.