மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

News image

ஆவின் பால்

Updated On :3 மே 2026, 1:21 am IST

தூத்துக்குடியில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் 3 வகையான பால் பாக்கெட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆவின் புல் கிரீம் பிரீமியம் என்ற பெயரில் ஆரஞ்சு, டிலைட் என்ற பெயரில் வயலட், நைஸ் என்ற பெயரில் ஊதா நிற பாக்கெட்களில் பால் விநியோகிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 50,000 லிட்டா் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களாக ஆவின் பால் வரத்து குறைந்துள்ளதாம். உணவகங்கள், தேநீா் கடைகளுக்கு அதிகளவில் விநியோகிக்கப்பட்டுவந்த பிரீமியம் பாக்கெட் பாலும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, டிலைட் பாக்கெட் பால் விநியோகமும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உனடியாக ஆவின் பாலை முழு அளவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.