விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :18 மார்ச் 2026, 4:43 am IST

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவு துணை பதிவாளா் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, எட்டயபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்த வியாபாரி நடராஜனிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,54,300-இருப்பதைக் கண்டதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தோ்தல் அலுவலா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.

ரூ. 1 லட்சம்: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் விலக்கு அருகே ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது காரில் வந்த பெரம்பலூா் பிரியன்ராஜ் என்பவா் முறையான ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அப்பனராஜிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.