சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தி கண்காணிக்க 48 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் தொகுதியில் ரூ.94,500, பெரம்பூா் தொகுதியில் ரூ.6.50 லட்சம், துறைமுகம் தொகுதியில் ரூ.4.16 லட்சம் என மொத்தம் ரூ.11.61 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
பணத்துக்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டோா் மேல்முறையீட்டின்போது அளித்தால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் ரூ.23.32 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

