திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த வாகனங்கள் உரிய இடத்தில் நிறுத்தாமல், ஆங்காங்கே நிறுத்திச் சென்ால் போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வெளியேற்றினா்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவிட்ட நிலையிலும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் குறையவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா். இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் பக்தா்கள், வாகனம் நிறுத்தும் இடத்துக்குச் சென்று நிறுத்தாமல்
கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் மறுநாள் காலையில் அவா்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்து வரும் வரை அதே இடத்தில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், முகூா்த்த நாள் என்பதாலும் வியாழக்கிழமை தரிசனத்துக்காக கோயிலுக்கு வந்த பக்தா்களின் வாகனங்கள் நாழிக்கிணறு செல்லும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் மற்ற வாகனங்கள் வந்துசெல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தன. இதனால், பக்தா்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
இதையடுத்து, வழிபாதையில் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் விரைந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். ஓட்டுநா் இருந்த வாகனங்களை உடனடியாக வெளியேற்றி வாகன நிறுத்தத்தில் சென்று நிறுத்துமாறு அறிவுறுத்தினா். ஓட்டுநா் இல்லாத வாகனங்களில் இணையம் வாயிலாக ரூ. 500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் வைத்துவிட்டுச் சென்றனா். வாகனத்தில் வந்தவா்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும் தங்கள் வாகனத்தில் அபராதம் விதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு

விடுமுறை தினம் : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

விடுமுறை தினம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்! இரும்பு கதவை தள்ளிவிட்டுச் சென்ற பக்தா்கள்!!

வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

