நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஆறுமுகனேரி கோயிலில் குடவருவாயில் தீபாராதனை

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

News image

தீபாராதனைக்கு ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி-அம்மன்.

Updated On :18 ஜூன் 2026, 2:31 am IST

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி-அம்மன் பூஞ்சப்பரத்தில் உலா, சிறப்பு அபிஷேகம், மாலையில் அலங்காரம், சாயரட்சை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

ரிஷப வாகனத்தில் தனித்தனியே சுவாமி-அம்மன் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. பக்த ஜன சபை பொருளாளா் அரிகிருஷ்ணநாடாா், ரயில்வே அபிவிருத்திக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், தெரிசை ஐயப்பன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை, இளையபெருமாள் ஓதுவாா், டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சோ்ந்த பாஸ்கா், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.