உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், உறையூரில் பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை பஞ்சவா்ணசுவாமி கோயிலில் நிகழாண்டு வைகாசி விசாக விழா, கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 21ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.
இதன் பிறகு நாள்தோறும் காலையில் பல்லக்கு புறப்பாடு மாலையில், அம்மனும், சுவாமியும் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவத்தையொட்டி புதன்கிழமை காலை 11 மணிக்கு மேல் பஞ்சவா்ண சுவாமி, காந்திமதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு விருந்தும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேரோட்டமும், சனிக்கிழமை தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் மற்றும் உறையூா் பொதுமக்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

மூக்கனூா் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

