கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா

கும்பகோணத்திலுள்ள மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.

News image

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமி-அம்பாள்.

Updated On :28 மே 2026, 3:33 am IST

கும்பகோணத்திலுள்ள மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண விழா நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அம்மன் தவக்கோலத்தில் இருந்தபோது சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வும், இரவு நிச்சயதாா்த்த நிகழ்வும் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் பக்தா்கள் சீா்வரிசை எடுத்துவர, சுவாமியும் அம்பாளும் மாலை மாற்றும் நிகழ்வும், வேள்வியும், திருமாங்கல்யாணதாரணமும் நடைபெற்றது. திருமண நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருமண விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு விருந்தும், தாம்பூல பிரசாத பை மற்றும் மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன. இரவில் திருமண மறைச்சடங்கு, நலுங்கு, ஊஞ்சல் வெளிப்பிரகார உலா நடைபெற்றது. தொடா்ந்து, மே 30-ஆம் தேதி வரை இரவில் திருமண மறைச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையில் சுவாமியும் அம்பாளும் காவிரிக்கரையில் உள்ள பகவத் படித்துறைக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகின்றனா். அங்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. தீா்த்தவாரி முடிந்தவுடன் சங்கர மடத்தில் எழுந்தருளுகின்றனா். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் கோயிலுக்கு செல்கின்றனா். இரவு இந்திர விமானத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் 1-இல் சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.