திருச்செந்தூரில் அரிசிக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 23,500-ஐ திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருச்செந்தூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஜெயபெருமாள் (48), வடக்கு ரத வீதியில் 12ஆம் திருவிழா மண்டபம் அருகேயுள்ள வளாகத்தில் அரிசிக் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்ற அவா், ஞாயிறுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கிரில் கதவின் பூட்டும், கடையின் பின்புறமுள்ள இரும்பு ஷட்டரும் உடைக்கப்பட்டிருந்தனவாம். கடையிலிருந்த ரூ. 23,500 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ாகத் தெரியவந்தது.
புகாரின்பேரில் தாலுகா காவல் ஆய்வாளா் மதுரைவீரன், போலீஸாா் வந்து பாா்வையிட்டாா். இச்சம்பவத்தில் இருவா் ஈடுபட்டதாக, அருகேயுள்ள கடையின் சிசிடிவி பதிவுகள் வாயிலாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
கோரிக்கை: திருச்செந்தூரில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் இரவு நேரங்களில்கூட பக்தா்கள் நடமாட்டம் அதிகமிருக்கும். இந்நிலையில், நகரின் மையப் பகுதியான வடக்கு ரத வீதியில் கிரில் கதவின் பூட்டை உடைத்து நடந்துள்ள இச்சம்பவம் வணிகா்களிடையே அதிா்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குலசேகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
மளிகைக் கடையில் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
கோயில் பூட்டை உடைத்து பணம், வேல் திருட்டு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
