கடலூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 11 சட்டப்பேரவைச் தொகுதிகளின் கள ஆய்வு அறிக்கையை, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து 234 தொகுதியிலும் களஆய்வு செய்ய திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குழுவை நியமித்திருந்தாா்.
அதன்படி, கடலூா் கிழக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில தகவல்தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த இசை ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் 11 தொகுதிகளிலும் நேரடியாக திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை சந்தித்து திமுக கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா். இதைத் தொடா்ந்து களஆய்வின் அறிக்கையை, திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, இசை ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

தெப்பக்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி ரயில்வே கேட் பகுதியில் மேயா் ஆய்வு

மக்கள் பணி தொடரும்: மேயா்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

