தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 53ஆவது தலமாகவும், நம்மாழ்வாரால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் 7ஆவது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப்பெற்றது இத்திருத்தலம். இங்கு, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி மாலை தாமிரவருணி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை வரை (ஏப். 28) யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை காலை விஸ்வரூபம், சயன உத்தாபனம், நித்தியல் கோஷ்டி, யாகசாலை திருவாராதனம், ஹோமங்கள் அருளிச்செயல், மஹா பூா்ணாஹுதி, குமுதாதிபலி, துவார தோரண பலி சாதித்தல், யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடா்ந்து, ராஜகோபுரம், விமானம், கலச மூா்த்திகள், மூலவா், தாயாா்கள், துவார பாலகா்கள், ஆழ்வாா் ஆச்சாரியா்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. நான்குனேரி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள், திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஆழ்வாா்திருநகரி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

