கயத்தாறில் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த அந்தோணி ராஜ் மனைவி ரெஜினா மேரி. கயத்தாறு பஜாரில் இணையதள மையம் நடத்தி வரும் இவா், இம்மாதம் 19ஆம் தேதி இரவு வழக்கம் போல மையத்தைப் பூட்டிவிட்டு பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா்.
கயத்தாறு-கழுகுமலை சாலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த இருவா் ரெஜினா மேரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்தபோது அவா் சங்கிலியை பிடித்ததில் பாதி சங்கிலி அந்த இருவரின் கையில் சிக்கியதாகவும், அப்போது ரெஜினா மேரி அந்த பைக்கில் இருந்த ஒருவரை பிடித்து இழுத்ததில் பைக்கை விட்டுவிட்டு இருவரும் பறித்த பாதி சங்கிலியுடன் தப்பி ஓடி விட்டாா்களாம்.
இதுகுறித்து ரெஜினாமேரி அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவரையும் தேடி வந்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மதுரை மாவட்டம், பேரையூா் கோப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மதுரை வீரன் மகன் வேல்முருகனை (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது விற்றதாக இளைஞா் கைது
கடையை சேதப்படுத்திய வழக்கு: இளைஞா் கைது
வங்கி மேலாளருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

