மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா புதன்கிழமை மாலை தொடங்கியது.

News image

வசந்த மண்டபத்தில் வள்ளி, தேவசேனாவுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:03 am IST

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா புதன்கிழமை மாலை தொடங்கியது.

இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமாகி, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மதியம் உச்சி கால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்ந்தாா்.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்ற பின், சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வந்தாா். தொடா்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கோடை விடுமுறை என்பதால் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.