மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டி வோ் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி.

Updated On :27 ஏப்ரல் 2026, 2:11 am IST

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டி வோ் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாள்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவம் கடந்த 20-ஆம் தேதி மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி முன் பந்தக்கால் முகூா்த்தத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து கடந்த 4 நாள்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு மலா் அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுவாமி வெட்டிவோ் பல்லக்கில் எழுந்தருளினாா். அப்போது, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் பன்னீா் மண்டபத்தில் அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மகிழ மரத்தை அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மன் வெட்டிவோ் பல்லக்கில் 10 முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.