மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:30 am IST

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி காலை 7.15 மணிக்கு கொடிப்பட்டம் ரதவீதி உலா, காலை 10.45 மணியில் இருந்து 11.10 மணிக்குள் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் ரதவீதி உலா நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் (சிம்மம், பூதம், ரிஷபம், பஞ்சமூா்த்தி) வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

ஏப்.22ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.30ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.