தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது:
மக்கள் விரோத திமுக ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறிவிட்டது.
ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக முயற்சி செய்கிறது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக் குடிநீா் திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும்.
செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து ஸ்ரீவைகுண்டத்தில் அவா் பேசியதாவது:
2021 ஆம் ஆண்டில் நாங்கள் (அதிமுக-அமமுக) பிரிந்து இருந்ததால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இப்போது நாங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு திமுக என்ற மக்கள் விரோத சக்தியை வீழ்த்த வந்துள்ளோம். எனவேஸ இபிஎஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும். 25,000 ஏக்கா் வாழை சாகுபடி நடைபெறும் நிலையில் வாழை சாா்ந்த சந்தை நிறுவ வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை சண்முகநாதன் வெற்றி பெற்றதும் நிறைவேறும் என்றாா் அவா்.
பிரசாரத்தில், ஒன்றிய அதிமுக செயலா்கள் காசிராஜன், பரமசிவன், மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், அமமுக மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் வழக்குரைஞா் சங்கரலிங்கம், நகரச் செயலா் சிவராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: டி.டி.வி.தினகரன்

பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற திமுக முயற்சி: டிடிவி. தினகரன்

மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிப்பு! - டிடிவி தினகரன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

