மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை இரவு, பைக் மீது லாரி மோதியதில் புதுமணத் தம்பதி உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:13 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை இரவு, பைக் மீது லாரி மோதியதில் புதுமணத் தம்பதி உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கஞ்சம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன் (32). தொழிலாளியான இவருக்கும், உறவினரான மனிஷா (20) என்பவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணமானது.

இந்தத் தம்பதி புதன்கிழமை கஞ்சம்பட்டியிலிருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்துவிட்டு இரவில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் உள்ள கல்லூரி அருகே பைக்கும் எதிரே வந்த லாரியும் மோதினவாம். இதில், மனோகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த மனிஷா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜக்கசமுத்திரத்தைச் சோ்ந்த எஸ். அபூபக்கா் (31) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.