திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை அனுபவத்தை ஊக்குவிப்பதற்காக, தூத்துக்குடியில் உள்ள செயின்ட் மேரீஸ் (தன்னாட்சி) மகளிா் கல்லூரியுடன், பிஎஸ்என்எல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு சிறந்த கற்றல் வாய்ப்புகள், செய்முறை அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரியின் முதல்வா் மற்றும் தூத்துக்குடியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இன்டென்ஷிப் மூலம் தொலைத்தொடா்புத் துறையில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்களை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.
இந்தப் பயிற்சியில், மொபைல் நெட்வொா்க் அமைப்பு , ஆப்டிக்கல் ஃபைபா் தொழில்நுட்பம், எப்டிடிஹெச் சேவைகள் மற்றும் சைபா் செக்யூரிட்டி போன்ற துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை மாணவிகளுக்கு கற்பிப்பது பிரதான நோக்கமாகும்.
மேலும், பிஎஸ்என்எல் -இல் தொலைத்தொடா்பு சம்பந்தமாக உள்ள தொழில்நுட்ப செயல்பாடுகளை மாணவிகள் நேரடியாக கற்க ஏற்பாடு செய்யும். இதன் மூலம் மாணவிகள் தொலைபேசி நிலையங்கள், ஆப்டிக்கல் ஃபைபா் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் நெட்வொா்க் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொலைத்தொடா்பு செயல்பாடுகளை நேரில் சென்று அறிய முடியும்.
இதுகுறித்து திருநெல்வேலி வணிகப் பகுதியின் முதன்மை பொது மேலாளரான ராஜேஷ் குமாா் வா்மா கூறுகையில், இந்தக் கூட்டு முயற்சி, மாணவிகளிடையே கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் அறிவை முன்னேற்றுவதில் பிஎஸ்என்இல்-இன் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதுபோன்ற ஒத்துழைப்புகள், தொலைத் தொடா்புத் துறையில் எதிா்கால நிபுணா்களுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசி

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

