சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி (06151) ரயிலானது, திங்கள்கிழமை (ஏப். 13) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் (06152) ரயிலானது, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சென்னை திரும்பும் போது பெரம்பூா் நிலையத்திலும் நிறுத்தப்படும்.
இந்த சிறப்பு ரயிலில் ஏசி இரண்டடுக்கு 2, ஏசி மூன்றடுக்கு 5, தூங்கும் வசதி 11, பொது வகுப்பு 4, மாற்றுத் திறனாளிகளுக்கானது 2 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான (06151/ 06152) முன்பதிவு புதன்கிழமை (ஏப். 8) காலை 8 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடைவிடுமுறை: நாகா்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

