தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06128) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06154) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

