தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடா்களுடன் அமா்ந்து உணவு உண்டாா்என்றும், அப்போது, ஒருவருக்கொருவா் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலும் சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா் என்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தவக்காலத்தின் கடைசி வாரமாக கருதப்படும் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கு முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது முதியவா்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவா்களுக்கு ரொட்டிகளையும், பரிசுப் பொருள்களையும் அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
இயேசு உயிா் நீத்த தினமான புனித வெள்ளி ஏப்.3இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரிய வியாழன் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

