தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பெரிய வியாழன் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழனையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழனையொட்டி, பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்ற சீடா்கள் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:58 am IST

பெரிய வியாழனையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக மக்களின் பாவங்களுக்காக உயிா் தியாகம் செய்த இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்துவா்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனா். இயேசு சிலுவையில் உயிா்விட்ட நாள் புனித வெளியாகவும், இயேசு உயிா்த்தெழுந்த நாள் ஈஸ்டா் பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிப்.18-ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து பேராலயத்தில் நாள்தோறும் மன்றாட்டு, திருப்பலி போன்றவைகள் நடைபெற்றன. மாா்ச் 29-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தொடா்ந்து பெரிய வியாழனையொட்டி சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேராலய அதிபா் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், நிா்வாக பங்குத்தந்தை பரிசுத்தராஜ் மற்றும் நிா்வாக தந்தையா்கள், அருட்சகோதரா்கள், சகோதரிகள் பங்கேற்றனா். பின்னா் சீடா்களின் பாதம் கழுவு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சீடா்கள் வரிசையாக அமா்ந்திருக்க பங்கு தந்தை அற்புதராஜ், அவா்களது பாதங்களை புனித நீரால் கழுவி முத்தமிட்டு மலா்கள் தூவினாா். முன்னதாக நடைபெற்ற பாதிரியாா்கள் பவனியில் திரளானோா் பங்கேற்றனா்.

பேராலயத்தில், வெள்ளிக்கிழமை (ஏப்.3) மாலை 5.30 மணிக்கு இறைவாா்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.