தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.
கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை; சமமானவா்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா்.
அதனை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் விதமான ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்கு குரு சுவாமிநாதன் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்புடன் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான உள்ளூா் மக்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாடானை தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கு

பெரிய வியாழன் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

